Live for Green
Run for Green
Tree Plantation
Rain Water Harvesting
destroy the Prosopis

What We DO

மரங்கள் இல்லாத பகுதிகளில் பராமரிப்புப் பணியை ஏற்கும் நபர்களின் இடங்களில் மரக்கன்றுகள் நடுதல் . மரங்கள் நடுவதற்கு மாணவர்களில் தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் நம்பசுமை இயக்கம் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் மழைநீர் சேமிப்புப் பற்றி மக்கள் அனைவரும் அறிந்திருந்தாலும் அதன் மூன்றுவகைகள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் முறைகள் பற்றி இன்னும் மக்களுக்குத் தெளிவான அறிவும் புரிதலும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றே நம் பசுமை கருதுகிறது.

ஒருலட்சம் மரங்கள் நடும் பசுமைப் புரட்சி !!

மரம் நடுவிழா

சனவரி 23, 2017 அன்று காடச்சனல்லூர் கிராமம் கே.பி.எல் நகரைச் சேர்ந்த திரு.பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி திருமதி.பாஸ்கரன் ஆகிய இருவரும் நம் பசுமை இயக்கம் பற்றிக் கேள்விப் பட்டு நமது அலுவலகத்திற்கு நேரில் வந்து வேண்டுகோள் கடிதம் கொடுத்துக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க , அவரது நிலத்திலும் மற்றும் அருகில் உள்ள ஓடைக்கரையிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி அவற்றுக்குப் பதிலாக நாட்டு வேம்பு மரங்களை நடும் முதல்கட்டப் பணிகளில் நம் பசுமை இயக்கத்தின் தன்னார்வலர்கள் எஸ்.பி.கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் 25 பேர் ஈடுபட்டனர். மரங்களை நடுவதற்கு 3 நாட்கள் முன்னரே சீமைக் கருவேல மரங்கள் வெட்டப்பட்டு அவற்றின் வேர்கள் அகற்றப்பட்டன. பிறகு அவை தீயிட்டு அழிக்கப்பட்டன. அந்த இடத்தில நம் பசுமை இயக்கத்தின் சார்பாக 51 நாட்டு வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த முதல் மரம்நடுவிழாவில் மாணவர்களான தன்னார்வலர்கள் மிகவும் ஆர்வத்துடன் பணியாற்றினார்.

இந்த 51 வேப்ப மரங்களையும் பராமரிப்பது , அவற்றைப் பாதுகாப்பது எங்கள் கடமையென்று திரு.பாஸ்கரன் அவர்களும்,திருமதி.பாஸ்கரன் அவர்களும் உறுதியளித்தனர்.

ஒருலட்சம் மரங்கள் நடும் பசுமைப் புரட்சி !!

மரம் நடுவிழா

வெப்படை அரசுப் பள்ளி தலைமையாசிரியை அவர்களின் வேண்டுகோளின்படி, வெப்படை அரசுப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களில் 58 மரங்களை நட்டுத் தருவதற்கு நம் பசுமை இயக்கத்தின் தன்னார்வலர்கள் 25 பேர். சனவரி,26, 2017 , அன்று வெப்படை அரசுப் பள்ளிக்குச் சென்றனர். அன்றையதினம் அரசுப் பள்ளியின் குடியரசு தின விழாவிலேயே நம் பசுமை இயக்கத்தின் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அன்றைய மரம் நடும் விழாவில் அரசுப்பள்ளியின் மாணவர்களும் மிகவும் ஆர்வமாக மரங்களை நடுவதற்கும் , நீரூற்றவும் உதவிகளைச் செய்தனர் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மற்றும் செயலர் ஆகியோரும் பங்கேற்று நம் பசுமை இயக்கத்தின் ஒருலட்சம் மரங்கள் நடும் திட்டத்தினைப் பாராட்டி வாழ்த்தினர். இவ்விழாவில் பெரும்திரளான அளவில் பொதுமக்களும் அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர். இந்த 58 மரங்களையும் பராமரித்து, அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு வெப்படை அரசுப் பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் , அப்பள்ளியின் மாணவர்கள் பொறுப்பேற்றனர்.

Would you like to Join Us?

To help our society to save our Natural Resources through this community.

Click Here
© Copyrights 2017 Nam Pasumai. All Rights Reserved.