Live for Green
Run for Green
Tree Plantation
Rain Water Harvesting
destroy the Prosopis

Supporters

துணை நிற்கும் நல்ல உள்ளங்கள்

இந்த ஒருலட்சம் மரங்கள் நடும் பசுமைப்புரட்சி திட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறியவுடன், சென்னை மரவங்கி நிறுவனரும் தலைவருமான உயர்திரு.முல்லைவனம் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இத்திட்டத்திற்குத் தமது ஆதரவினையும் தெரிவித்தார். மேலும் உடனடியாக தமது மரவங்கி சார்பாக முதல்கட்டமாகப் பத்தாயிரம் மரக்கன்றுகள் கொடுத்து உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் நம்பசுமை தொடக்க விழாவில் தெரிவித்தார். அதேபோல சென்னை மரவங்கியிலிருந்து 1500 மரக்கன்றுகளை அனுப்பி வைத்தார். மேலும் மரவங்கி சார்பாக மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து ஒத்துழைப்புகளை நல்கிட விரும்புவதாகத் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் திருப்பூரிலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் வெற்றி அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குனர்கள் நம் பசுமை இயக்கத்திற்குப் பெரிதும் துணை நின்று வழிகாட்டியாக நல்ல ஆலோசகர்களாக செயல்பாடுகளில் துணைநின்று வருகிறார்கள். மேலும் நம் பசுமை இயக்கத்தின் தொடக்கவிழாவில் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் அனைத்து இயக்குநர்களும் பகேற்றுச் சிறப்பித்தது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது.

ஒருலட்சம் மரங்கள் நடும் இம்மாபெரும் திட்டத்திற்கு ஆதரவு அளித்துத் துணை நிற்கும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனவிரிவாக்க அலுவலர்கள் நமது நம் பசுமை தொடக்க விழாவிற்கு நேரில் வருகை தந்து இந்த மரங்கள் நடும் திட்டத்தின் முறைகளையும் அதனால் கிடைக்கவுள்ள பயன்களையும் மிகத்தெளிவாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துரைத்தனர். இதன் மூலம் நம் பசுமை இயக்கத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு வனத்துறை தனது வனவிரிவாக்க மையத்தின் மூலம் மரக்கன்றுகள் வழங்குதல், மரநாற்றுகள் விதைத்தல் மற்றும் வளர்த்தல் , மரக்கன்றுகள் நடுதல் போன்ற எல்லா வகையிலும் துணை நின்று ஆலோசனைகள் வழங்கும் என்று மாவட்ட வன அதிகாரிகள் நம் பசுமை தொடக்க விழாவில் அறிவித்தனர்.

Would you like to Join Us?

To help our society to save our Natural Resources through this community.

Click Here
© Copyrights 2017 Nam Pasumai. All Rights Reserved.