Live for Green
Run for Green
Tree Plantation
Rain Water Harvesting
destroy the Prosopis

Our Dreams

எந்த வொரு செயல்பாட்டிலும் குறிக்கோளுடன் தொடங்குவது நமது பாரத நாட்டின் பாரம்பரியம் ஆகும். “ குறிக்கோளில்லாது கெட்டேன்” என்று திருநாவுக்கரசர் கூறியதைப்போல நம் பசுமை என்ற இயக்கத்தின் இலட்சியத்தை நாம் சென்றடைய ஒருலட்சம் மரங்கள் என்ற குறிக்கோள் உருவானது எப்படி தெரியுமா ? கடந்த 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா ) வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையின்படி இந்தியாவில் ஏற்பட்டுவரும் வறட்சியைப் போக்கவும் , எதிர்காலத்தில் வரப்போகும் குடிநீர்ப்பற்றாக்குறையைப் போக்கிடவும் ஒவ்வொரு இந்தியனும் குறைந்தது 27 மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். என்ற கருத்துரு வெளியானது.ஆகவே நமது எஸ்.பி.கே கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளிகளில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட பணியாளர்களும், எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளிகளில் படித்துவரும் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் அனைவரும் சேர்ந்து ஆளுக்கு 27 மரங்களை நட்டு வளர்த்தாலே ஒரு லட்சம் மரங்கள் என்ற இலக்கு எளிதாக எட்டி விடலாம் என்ற அடிப்படையில் ஒருலட்சம் மரங்கள் நடுதல் என்ற இலக்கு ஆரம்பத்தில் ஏற்படுத்தப் பட்டது. ஆயினும் தற்சமயம் இத்திட்டத்திற்குப் பெருகிவரும் ஆதரவுகளைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் இந்த மரம் நடும் திட்டத்தின் அடுத்தடுத்த கட்டங்களைச் செயல்படுத்தலாம் இதன் முதல் கட்ட இலக்கு ஒருலட்சம் இதுவே தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று எஸ்.பி.கே குழுமத்தின் தலைவர் டாக்டர். ஏ.எஸ்.பிரபு அவர்கள் முடிவெடுத்து அறிவித்து உள்ளார்.

  1. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் நம்பசுமை இயக்கம் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் மழைநீர் சேமிப்புப் பற்றி மக்கள் அனைவரும் அறிந்திருந்தாலும் அதன் மூன்றுவகைகள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் முறைகள் பற்றி இன்னும் மக்களுக்குத் தெளிவான அறிவும் புரிதலும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றே நம் பசுமை கருதுகிறது. ஆகவே ,
  2. மழைநீர் சேமிப்பில் மூன்று நிலைகள் :
    1. மழைநீரை நேரடியாகச் சேமித்தல்
    2. மழைநீரை உரிய வடிகால் மூலம் வடிகட்டி மறுசுழற்சி முறையில் பயன்படுத்துதல்.
    3. மழைநீரை நேரடியாக நிலத்தடியில் விட்டு,நிலத்தடி நீரைச் சேமித்தல்
  3. நம் பசுமை ஒரு லட்சம் மரங்கள் நடும் திட்டத்திற்காக மரநாற்றங்கால் அமைத்து மரவிதைகளை வளர்த்தல்
  4. திடக்கழிவு மேலாண்மை மற்றும் உணவுக் கழிவுகள் மேலாண்மை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் . அதற்கான கட்டமைப்பு களை நிறுவிட வழிகாட்டுதல் நமது கழிவுகளை நாமே பயன்படுத்தும் மறுசுழற்சி முறைகளை அறிமுகம் செய்தல்
  5. மாடித் தோட்டம் அமைக்கும் முறைகள் மற்றும் மாடித் தோட்டம் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வீட்டிலேயே இயற்கை முறையில் வளர்த்துப் பயன்படுத்துதல் – விழிப்புணர்வு மற்றும் கட்டமைப்புகளை நிறுவிட உதவுதல்
  6. நாமக்கல் மாவட்டம் மற்றும் அருகாமையில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருதல் மற்றும் தூய்மையாக்கல் – முதல் கட்டமாக தோ.கவுண்டம்பாளையம் ஏரியைத் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதி பெற்று அந்த ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு தூர்வாரப்படும் . அதே சமயம் அந்த ஏரிக்கு நீர்கொண்டு வரும் ஓடையும் தூர்வாரப்படும் .
  7. சீமைக் கருவேல மரங்களின் தீமைகளை எடுத்துரைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சீமைகருவேல மரங்களை அகற்றுதல்
  8. சீமைக் கருவேலம் மரங்களை அகற்றி அந்த இடங்களில் மரங்களை நடுதல்.
  9. சீமைக் கருவேல மரங்களின் தீமைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வருகிற 2017 ஜூலை மாதம் திருச்செங்கோடு நகரில் பசுமை மராத்தான் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான முன் அனுமதி பெறப்பட்டுள்ளது.
  10. நீர்நிலைகள் , தோட்டங்கள், வயல்வெளிகளின் கரை ஓரங்களில் பனை மரங்களை நடுதல் – பனை மரம் நிலத்தடி நீர்மேலாண்மையில் மக்களுக்கு உதவுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் .
  11. வேளாண்மை அடிப்படைக் கல்வியைப் புதிய பாடத்திட்டமாய் உருவாக்கி மாணவர்களைக் குழந்தைப்பருவத்தில் இருந்தே விவசாய அறிவுடன் வளரச் செய்தல்.

Would you like to Join Us?

To help our society to save our Natural Resources through this community.

Click Here
© Copyrights 2017 Nam Pasumai. All Rights Reserved.