Live for Green
Run for Green
Tree Plantation
Rain Water Harvesting
destroy the Prosopis

About Us

நம் பசுமை என்ற இந்த மாபெரும் இயக்கம் உருவானது எப்படி ?

இயல்பாகவே சமூக அக்கறையும் சுற்றுச்சூழல் ஆர்வமும் கொண்ட எஸ்.பி.கே குழுமத்தின் சேர்மன் டாக்டர் ஏ.எஸ்.பிரபு அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலும் மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் வறட்சி, மழையின்மை மற்றும் நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணிகளைப் பற்றிச் சிந்தித்து இவையனைத்திற்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களிடையே ஒரு சமூக அக்கறையை உருவாக்கிட வேண்டும் அதனால் எதிர்காலத் தேவையை உணர்த்தி நாமக்கல் மாவட்டத்தையும் சுற்றுப்பகுதிகளையும் பசுமையாக மாற்றிட வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளை அடிப்படையாகக்கொண்டு இந்த மாபெரும் இயக்கத்திற்கு நாம் பசுமை என்று பொருள் படும் வகையில் NAMAKKAL என்ற ஆங்கிலப் பெயரின் முதல் மூன்று பசுமை என்ற சொல்லோடு சேர்த்து NAM PASUMAI என்று பெயர் உருவானது. அதே சமயம் தமிழில் நாம் என்று சொல்வதை விட நம் என்று சொல்வதால் ஏற்படும் உணர்வும் உண்மையும் சிறப்பானது என்பதால் “நம் பசுமை “ என்று இயக்கத்தின் பெயரும் அழகான இயக்கத்தின் சின்னமும் உருவாயின.

நம் பசுமை கருத்துருவாக்கம் யாருக்குரியது ? இந்த நம் பசுமை என்ற இயக்கத்தின் கருதுகோள் மற்றும் இதன் உருவாக்கம் முழுக்க திருச்செங்கோடு எஸ்.பி.கே கல்வி அறக்கட்டளைக்கு உரியதாகும். இவ்வியக்கத்தை நாமக்கல் மாவட்டம் மற்றும் அருகமைப்பகுதிகளில் முன்னெடுத்துச் செல்வது நமது எஸ்.பி.கே கல்வி அறக்கட்டளையின் தலையாய கடமையாகும். ஆனால் இதன் பல்வேறுபட்ட செயல்பாடுகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்களும் சமூக சேவையாற்றும் குழுக்களும் இந்த இயக்கத்தின் அங்கமாக மாறிவருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

ஒருலட்சம் மரங்கள் நடும் பசுமைப் புரட்சி !!

நம் பசுமை இயக்கத்தின் முதல் குறிக்கோளாக உருவான திட்டம் இந்த ஒருலட்சம் மரங்கள் நடும் பசுமைப் புரட்சியாகும். ஒரு லட்சம் மரங்களை நட்டு வளர்ப்பது அவற்றைப் பராமரிப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளைக் கொண்ட மாபெரும் திட்டம் இதுவாகும். இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசின் வனத்துறை ஆதரவு தந்து பெரிதும் உதவி வருவது பாராட்டுக்குரிய செய்தியாகும். இந்த ஒருலட்சம் மரங்கள் நடும்திட்டமும் நம் பசுமை இயக்கமும் சனவரி 7, 2017 அன்று எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளிகளின் ஆண்டுவிழாவில் பிரபல திரைப்பட நடிகர் விவேக் அவர்களால் முதல் மரக்கன்று நட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

Would you like to Join Us?

To help our society to save our Natural Resources through this community.

Click Here
© Copyrights 2017 Nam Pasumai. All Rights Reserved.